மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார்

மாக்கந்துர மதுஷ் கைது செய்யப்பட்ட போது, இலங்கையின் அரசியல்வாதி ஒருவரும் சிக்கினார் 0

🕔6.Feb 2019

துபாயில் வைத்து நேற்று கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் என்பவர் பிரபல போதைப் பொருள் கடத்தர்காரர் என்பதோடு, பல கொலைகளுடனும் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. மாக்கந்துர மதுஷின் இரண்டாவது மனைவியின் முதல் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றபோது, அதில் கலந்து கொண்ட மதுஷ் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் மூவர் போதைப்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔5.Feb 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார். பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்;

மேலும்...
பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’

பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’ 0

🕔5.Feb 2019

– க. கிஷாந்தன் – பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று செவ்வாய்கிழமை மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார். ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு, நாளாந்தம்

மேலும்...
மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு

மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு 0

🕔5.Feb 2019

– அஹமட் –வெற்றுப் பிரபல்யங்களுக்காக அரசியல்வாதிகள் காட்டும் ‘படங்கள்’ வெறுப்பூட்டும் வகையிலானவை. மரண வீட்டிலும், மற்ற மனிதர்களின் வேதனைகளிலும் கூட, இவ்வாறானவர்கள் பிரபல்யம் தேடி அலைவதுண்டு.அதுபோல், கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – பிரபல்யம் தேடிக்கொள்வதற்காக மூக்கு

மேலும்...
ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார் 0

🕔5.Feb 2019

தனது சேவைக் காலத்தின் இறுதி நாளான பெப்ரவரி 01ஆம் திகதிக்குப் பின்னர், தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்கப் போவதில்லை என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் – பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக மிகவும் கடுமையாகச் செயற்பட்டவராக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மேலும்...
பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர் 0

🕔5.Feb 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர்

தேசிய அரசாங்க பிரேரணைக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை: சு.க. செயலாளர் 0

🕔5.Feb 2019

தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக தெரிவித்து ஐ.தே.கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைக்கு ஆதரவாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரேனும் வாக்களித்தால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற

மேலும்...
தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔5.Feb 2019

கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேற்படி மாணவர்கள் இன்று செவ்வாய்கிழமை கெப்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் வெவ்வேறாக அபராதம் விதித்து, நீதிவான் எச்.கே.மாலிந்த ஹர்சன டி

மேலும்...
தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும்

தேசிய அரசாங்கம்: போலியும், வெட்கமும் 0

🕔5.Feb 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் உருவான மோதல்,

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார்

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு, ஜனாதிபதி எதிர்ப்பு: சுதந்திர தின உரையில் வெளியிட்டார் 0

🕔4.Feb 2019

ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இந்த எதிர்ப்பினை அவர் வெளியிட்டார். காலிமுகத் திடலில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றன.

மேலும்...
தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ் 0

🕔4.Feb 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார். வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே,

மேலும்...
சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம் 0

🕔3.Feb 2019

– றிசாத் ஏ காதர் –சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் பன்னலகம பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும்  மரநடுகை என்பன நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு அமைவாக, இவை மேற்கொள்ளப்பட்டன.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம்.

மேலும்...
அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள்

அழகய்யாவின் கடையை அலங்கரிக்கும், இந்தியத் தலைவர்கள் 0

🕔3.Feb 2019

காந்தி, அண்ணா, காமராஜர், அப்துல் கலாம், பெரியார், சுபாஷ் சந்திரபோஸ், கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் அம்பேத்கர் என்று, ஏராளமான இந்திய தலைவர்களின் படங்கள், சுவர்களில் சுற்றி வரத் தொங்க விடப்பட்டுள்ள சிறிய கடையொன்றில், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அழகய்யாவுக்கு 71 வயதாகிறது. அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த அழகய்யா – ஒரு சலவைத் தொழிலாளி.

மேலும்...
கிறிஸ்துவுக்கு முற்பட்ட 50 மம்மிகள், எகிப்தில் கண்டெடுப்பு

கிறிஸ்துவுக்கு முற்பட்ட 50 மம்மிகள், எகிப்தில் கண்டெடுப்பு 0

🕔3.Feb 2019

எகிப்தின் டூல்மிக் (305-30 கிமு) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக கருதப்படும் 50 பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அந்நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே உள்ள மின்யா என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள டூனா எல்-ஜெபல் என்ற இடத்தில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 குழந்தைகளின் உடல்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில்

மேலும்...
‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின

‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின 0

🕔3.Feb 2019

போதைப் பொருள்களை பாவித்துக் கொண்டு ‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்ட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலநறுவை – ஹிங்குராகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்படி குழுவினர் ஓப்பியம் மற்றும் கேரள கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்ததோடு, அவற்றினைப் பாவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்