அட்டாளைச்சேனை எப்போது நகர சபையாகும்; புதிது செய்தித்தளத்தை சுட்டிக்காட்டி, அதிர்வு நிகழ்ச்சியில் ஹரீசிடம் கேள்வி 0
– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனையை எப்போது நகர சபையாக்குவீர்கள் என்று, ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸிடம், வசந்தம் தொலைக்காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட வினாவுக்கு, அவர் பதிலளித்தார். அட்டாளைச்சேனையை நகரசபையாக்குவதாக ஹரீஸ் வழங்கிய வாக்குறுதியை நினைவுபடுத்தி ‘புதிது’ செய்தித்தளம் ‘கவுண்டவுன்’ (Countdown) வழங்கி வருவதையும் இதன்போது, அதிர்வு நிகழ்ச்சி நடத்துநர், ஊடகவியலாளர் இர்பான் சுட்டிக்காட்டினார்.