பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகளில் 27 பேர், மீண்டும் சிறை திரும்பினர்

🕔 February 5, 2019

சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்பேரில் விடுவிக்கப்பட்ட 545 சிறைக் கைதிகளில், 27 பேர் மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளனர் என, சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றத்துக்காக, நீதிமன்றம் விதித்த அபராதப் பணத்தைச் செலுத்த முடியாதவர்களே, ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நேற்று  விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களில் 27 பேர் மீளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“மேற்படி 27 பேரும் சிறிய குற்றங்களைப் புரிந்தவர்கள் எனும் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆயினும், அவர்கள் புரிந்த வேறு குற்றங்களுக்காகவும் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர். எனவேதான் அவர்கள் விடுவிக்கப்படவில்லை” என்று, சிறைச்சாலைத் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

ஆயினும், குறித்த 27 பேர் தவிர – ஏனைய 518 கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்