சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீபின், சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம்

🕔 February 5, 2019

விசேட அதிரடிப்படையின் தலைவரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லத்தீபின் சேவைக்காலத்தை ஒரு வருடத்துக்கு நீடிக்க, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை அமைச்சரவையில் முன்வைத்தார்.

பொலிஸ் திணைக்களத்தில் உப பொலிஸ் பரிசோதகராக 1979ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி இணைந்து கொண்ட லத்தீப்; 1984ஆம் ஆண்டு பெப்ரவரி 07ஆம் திகதி, விசேட அதிரடிப்படையில் சேர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையின் 11ஆவது தலைவராக, இவர் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் திகதி கடமையேற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், பெப்ரவரி 01ஆம் திகதியுடன் தனது சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்; அதன் பின்னர் தனக்கு வழங்கப்படும் சேவை நீடிப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஓய்வு பெற்றார் லத்தீப்: பிந்திய சேவை நீடிப்பையும் நிராகரித்தார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்