மூக்குடைந்தார் ராஜாங்க அமைச்சர்; வெற்றுப் பிரபல்யத்துக்காக அலைந்ததன் விளைவு
வெற்றுப் பிரபல்யங்களுக்காக அரசியல்வாதிகள் காட்டும் ‘படங்கள்’ வெறுப்பூட்டும் வகையிலானவை. மரண வீட்டிலும், மற்ற மனிதர்களின் வேதனைகளிலும் கூட, இவ்வாறானவர்கள் பிரபல்யம் தேடி அலைவதுண்டு.
அதுபோல், கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டு, தற்போது விடுதலை பெற்றுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடயத்தில், ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – பிரபல்யம் தேடிக்கொள்வதற்காக மூக்கு நுழைத்து, அந்த மாணவர்கள் தொடர்பில் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் இட்ட பதிவு ஒன்றின் மூலம், மூக்குடைபட்டுள்ளார்.
மேற்படி மாணவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு தமக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தி விடுதலை பெற்றதைக் கூட அறியாத அல்லது விளங்கிக் கொள்ளாத ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்; தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை என்று எழுதி அசிங்கப்பட்டுள்ளார்.
ராஜாங்க அமைச்சரின் மேற்படி ‘பேஸ்புக்’ பதிவு குறித்தும், தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் பொறியியலாளர் ஜவ்ஸி அப்துல் ஜப்பார், தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெளிவான விளக்கம் ஒன்றினை வழங்கியுள்ளார். அதனை அவ்வாறே வாசகர்களுக்குத் தருகின்றோம்.
ஜவ்ஸியின் பேஸ்புக் பதிவு
பிணை என்றால் வழக்கு தொடரும். பிணையில் யாரும் விடுதலை (aquit) ஆவதில்லை. பிணை என்றால் விளக்க மறியலில் இருந்து விடுவிக்கப்படுவர்.(release
பிணை வழங்கப்பட முடியாத குற்றப்பிரிவு ஒன்றின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தாக்கல் பண்ணப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
மாணவர்களின் மீது penal code 120 140 மற்றும் Antiquities act 15 இன் கீழும் வழக்கு பதியப்பட்டது .
மேல் குறித்த பிரிவுகளில் முதல் இரண்டும் காவல்துறை இன் மூலம் தாக்கல் பண்ணப்பட்டவை. மூன்றாவது குற்றம் தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் காவல் துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் படிக்கு தாக்கல் பண்ணப்பட்டது.
பொலிஸ் ஐக் கூட வாபஸ் பண்ண வைக்க முடியாத அரசியல் தொல்பொருள் திணைக்களத்துடன் பேசியிருப்பதாக கதை விட்டது எத்தனை நகைச்சுவை.???
மதத்தை நிந்தித்து மக்களுக்கு மத்தியில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை (120), சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை (140) மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேற்படி குற்றங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர்
முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா 1,000 ரூபாய் அபராதமும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தொடர்பான செய்தி: தூபியில் ஏறிய தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு, அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு