பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியின் சமையலறைக்கு ‘சீல்’

🕔 February 5, 2019

– க. கிஷாந்தன் –

த்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியின் சமையல் அறைக்கு இன்று செவ்வாய்கிழமை மாலை கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய, சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் எஸ். சௌந்தரராகவன் தெரிவித்தார்.

ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியிலுள்ள சுமார் 450 மாணவர்களுக்கு, நாளாந்தம் இந்த சமையல் அறையிலிருந்தே சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆனால் இந்த சமையல் அறை அசுத்தமாக காணப்படுவதனாலும், சமையல் மேற்கொள்வதற்கு பொருத்தமான இடமாக இதனை வைத்திருக்காதமையினாலும் மாணவர்கள் நாளாந்தம் நோய்வாய்ப்பட்டு வருவதாக முறையிடப்பட்டள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு அமையவே, இன்று  இந்த சமையலறையினை சோதனை செய்ததாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கல்லூரியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 100ற்கும் மேற்பட்ட மாணவர்கள் உணவு விசமானதில் நோய்வாய்ப்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து மேற்படி சமயலறையை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது சுத்தப்படுத்தப்பட வேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீண்டும் சமையலறை திறக்கும் வரை வெளியிலிருந்து மாணவர்களுக்கு சாப்பாடு பெற்றுக்கொடுக்குமாறு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்