சுதந்திர தினத்தை முன்னிட்டு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நடத்திய இலவச மருத்துவ முகாம்
🕔 February 3, 2019
– றிசாத் ஏ காதர் –
சுதந்திர தினத்தை முன்னிட்டும், இன ஒற்றுமையை வலியுறுத்தியும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினால் பன்னலகம பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மரநடுகை என்பன நேற்று சனிக்கிழமை இடம்பெற்றன.
அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்துக்கு அமைவாக, இவை மேற்கொள்ளப்பட்டன.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளை, பொது சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் பீ.கே. ரவீந்திரன், தர முகாமைத்துவ பொறுப்பு வைத்திய அதகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிய பரிபாலகர்கள், சிரேஷ்ட தாதியர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதார சேவையாளர்கள் என பலரது பங்குபற்றுதலுடன் மேற்படி நிகழ்வுகள் மிகவும் சிறப்புற நடைபெற்றன.
இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றிருந்தனர். மக்களின் காலடிக்குச் சென்று மருத்துவம் வழங்கிய அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையினருக்கு பன்னலகம மக்கள் தங்கள் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் இதன்போது தெரிவித்தனர்.