‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்டோர் கைது; 06 பேர் பெண்கள்: போதைப் பொருட்களும் சிக்கின

🕔 February 3, 2019

போதைப் பொருள்களை பாவித்துக் கொண்டு ‘பேஸ்புக் பார்ட்டி’யில் கலந்து கொண்ட ஒரு குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொலநறுவை – ஹிங்குராகொட பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேற்படி குழுவினர் ஓப்பியம் மற்றும் கேரள கஞ்சா ஆகிய போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்ததோடு, அவற்றினைப் பாவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்போது 89 பேர் கைதானதாகவும், அவர்களில் 06 பேர் பெண்கள் எனவும், பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்