Back to homepage

மேல் மாகாணம்

மாதவிடாய்  நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம் 0

🕔22.Mar 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 0

🕔22.Mar 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (22) ஊடகங்களிடம் பேசிய முன்னாள் ஜனாதிபதி, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள்

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார்

பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார் 0

🕔22.Mar 2024

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது 0

🕔21.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தின் பின்னர் தோற்கடிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம், 42 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 117 பேரும் ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர். இதன்படி, நாடாளுமன்ற சபாநாயகராக மஹிந்த

மேலும்...
இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம்

இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் அங்கிகாரம் 0

🕔21.Mar 2024

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையழுத்திட்டுள்ளார். இந்த இரண்டு சட்டமூலங்களும் நேற்று (மார்ச் 20) சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்றன என்று, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இரண்டு சட்டமூலங்களும் 2024 ஆம் ஆண்டின் 15

மேலும்...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔21.Mar 2024

இணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இணையவழி பாதுகாப்பு

மேலும்...
பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம்

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பொதுஜன பெரமுன தீர்மானம் 0

🕔21.Mar 2024

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் – பொதுத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் என – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று (20) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்

மேலும்...
உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல் 0

🕔20.Mar 2024

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது. மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை குறித்த சட்டத்தரணியை – வழக்கு நடவடிக்கைகளில்

மேலும்...
நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம், விமான நிலையத்தில் சிக்கியது 0

🕔20.Mar 2024

நூறு மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கடத்திச் செல்ல முற்பட்ட இரு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (19) கைது செய்யப்பட்டனர். இரண்டு பயணிகளும் சுமார் 05 கிலோ எடையுள்ள தங்க நகைகளை வைத்திருந்தனர் என, இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் துபாயில் இருந்து நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை

மேலும்...
‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா

‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா 0

🕔19.Mar 2024

கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஹேஷா விதானகே (ஐக்கிய மக்கள் சக்தி), காமினி வலேபொட (பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்.எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் கோப் குழுவில் இருந்து ராஜினாமா

மேலும்...
எரானை தொடர்ந்து தயாசிறியும் ‘கோப்’ குழுவிலிருந்து ராஜாநாமா

எரானை தொடர்ந்து தயாசிறியும் ‘கோப்’ குழுவிலிருந்து ராஜாநாமா 0

🕔19.Mar 2024

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர – பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார். தயாசிறி ஜயசேகர தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப் குழு உறுப்பினர் பதவியிலிருந்து – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமைச்சரவையில் ரணில்

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமைச்சரவையில் ரணில் 0

🕔19.Mar 2024

பொதுத் தேர்தலுக்கு முன்னர் – ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளை கூடிய விரைவில் முடிக்குமாறும்

மேலும்...
யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை 0

🕔19.Mar 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெஹலியவை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட

மேலும்...
நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔18.Mar 2024

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை – புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 04 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக

மேலும்...
ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு 0

🕔18.Mar 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது நிலவும் வெப்பமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்