எரானை தொடர்ந்து தயாசிறியும் ‘கோப்’ குழுவிலிருந்து ராஜாநாமா

🕔 March 19, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர – பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோப் குழு உறுப்பினர் பதவியிலிருந்து – ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன ராஜினாமா செய்த மறுநாள் – தயாசிறி ராஜிநாமா செய்துள்ளார்.

கோப் அறிக்கைகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், ஊழல் நடவடிக்கைகள் அல்லது தவறான நிர்வாகத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நம்பகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, எரான் விக்ரமரத்ன அவரின் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் கோப் குழுவின் தலைவராக எதிர்க்கட்சி உறுப்பினரை நியமிக்கும் நடைமுறையை பின்பற்றிய போதிலும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தற்போது கோப் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்