இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

🕔 March 21, 2024

ணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை அங்கீகரிப்பதற்காக சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்