பொதுத் தேர்தலே முதலில் வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷவும் வலியுறுத்துகிறார்

🕔 March 22, 2024

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தலை நடத்தி – பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை – பசில் ராஜபக்ஷ சந்தித்த போது, பொதுஜன பெரமுனவின் சார்பில் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த யோசனையை கூறியதாகவும் மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

“ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்த கட்சிக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும். எனவே நீதி கிடைக்க வேண்டுமானால் முதலில் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இருந்துபோதிலும் எந்தவொரு தேர்தலுக்கும் தாம தயார் எனவும் மேலும் அவர்தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்