சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றது

🕔 March 21, 2024

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (மார்ச் 21) நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தின் பின்னர் தோற்கடிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானம், 42 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு எதிராக 117 பேரும் ஆதரவாக 75 பேரும் வாக்களித்தனர்.

இதன்படி, நாடாளுமன்ற சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தொடர்ந்தும் செயற்படுவார்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது.

ஐக்கய மக்கள் சக்தி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம் – முதலில் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (19) இது தொடர்பான விவாதம் தொடங்கியது.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணை மார்ச் 05ஆம் திகதி பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்