மாதவிடாய் நாப்கின்களை பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம், ஏப்ரல் முதல் அறிமுகம்

🕔 March 22, 2024

பாடசாலை மாணவிகளுக்கு மாவிடாய் காலத்துக்குரிய சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள 08 லட்சம் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும், இதற்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை பாடத்திட்டத்தில் தரம் 06 முதல் 09 வரை விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் ஆகிய பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக – ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயர்தர மாணவர்களுக்காக 16+ என்ற மேலதிக வாசிப்பு புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் உரையாற்றும் போது இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்