‘கோப்’ குழுவிலிருந்து இதுவரை 07 உறுப்பினர்கள் ராஜிநாமா

🕔 March 19, 2024

கோப் குழுவுக்கு புதிய தலைவரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்றும் (19) பலர் ராஜினாமா செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணகியன் ராசமாணிக்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), ஹேஷா விதானகே (ஐக்கிய மக்கள் சக்தி), காமினி வலேபொட (பொதுஜன பெரமுன) மற்றும் ஸ்.எம். மரிக்கார் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோர் கோப் குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத்தும் கோப் குழுவில் இருந்து விலகுவதாக இன்று முன்னதாக அறிவித்தார்.

கோப் குழுவில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட தலைவருடன் இணைந்து செயற்பட முடியாது என தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் இன்று கோப் குழுவில் இருந்து விலகினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கோப் குழுவில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை நேற்று அறிவித்திருந்தார்.

30 பேரைக் கொண்ட கோப் குழுவிலிருந்து இதுவரை 07 பேர் ராஜிநாமா செய்துள்ளனர்.

கோப் குழுவின் தலைவராக பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளமைக்கே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்