Back to homepage

மேல் மாகாணம்

கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு

கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு; திங்கட்கிழமை அலறி மாளிகையில் சந்திப்பு 0

🕔30.Apr 2020

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, முன்னைய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அலறி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எவ்வாறாயினும், முன்னைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் இணைந்து விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்திருந்த நிலையிலேயே, முன்னைய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதமர்

மேலும்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை கைது செய்ய நடவடிக்கை: தடுத்து நிறுத்த, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔29.Apr 2020

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாட் பதியுதீனை கைது செய்வதற்கான நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால், அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவர் – உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளதாகவும் அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித்

மேலும்...
கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு 0

🕔29.Apr 2020

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார். கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க

மேலும்...
மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

மே 15க்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே, ஜுன் 20 இல் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔29.Apr 2020

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர்

மேலும்...
தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும்

தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும் 0

🕔29.Apr 2020

தபால் நிலையங்கள் அனைத்தும் – எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை

மேலும்...
இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு

இலங்கைக்கான உதவிகளை வெளிப்படுத்தினார் மனோ கணேசன்: தரவுகளோடுதான் பேசுவேன் என்றும் தெரிவிப்பு 0

🕔28.Apr 2020

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், இலங்கைக்குக் கிடைத்துள்ள சர்வதேச உதவிகளை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் “நான் எப்போதும் தரவுகளோடுதான் பேசுவேன். என்னுடன் விளையாட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார். (1) அமெரிக்கா – 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் (இலங்கைப் பெறுமதியில் ரூபா 250,691,220)(2) சீனா – 500

மேலும்...
ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா?

ரஞ்சனுக்கு ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ சித்தி: சட்டம் படிக்கும் கனவு பலிக்குமா? 0

🕔27.Apr 2020

– அஹமட் – இன்று வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கிலப் பாடத்தில் ‘சி’ (C) சித்தி பெற்றுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவலை ரஞ்சன் ராமநாயக்க பகிர்ந்துள்ளார். தான் சட்டக் கல்வியை கற்க விரும்புவதாகவும், அதற்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் 0

🕔27.Apr 2020

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தோற்றியவர்களின் பெறுபேறுகள் இன்று திங்கட்கிழமை மாலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை 4987 மத்திய நிலையங்களில் இடம்பெற்றது.

மேலும்...
முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு

முன்னர் அறிவிக்கப்பட்ட படி, ஊரடங்கு நாளை தளர்த்தப்படாது: ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நாட்டின் அநேகமான மாவட்டங்களில் தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்கிழமைதான் ஊரடங்கு தளர்த்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் உள்ள அனைத்து முப்படையினரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் – அவர்கள் தமது பணியிடங்களுக்கு உடனடியாகத் திரும்புவதற்கு ஏதுவான முறையில் – நாளை, திங்கள், நாடு தழுவிய

மேலும்...
ஊடக சுதந்திரத்தில் உகண்டா, சிம்பாவே நாடுகளை விடவும் இலங்கை பின்னடைவு: 127ஆவது இடத்துக்கு வீழ்ந்தது

ஊடக சுதந்திரத்தில் உகண்டா, சிம்பாவே நாடுகளை விடவும் இலங்கை பின்னடைவு: 127ஆவது இடத்துக்கு வீழ்ந்தது 0

🕔26.Apr 2020

– முன்ஸிப் அஹமட் – ஊடக சுதந்திரமுள்ள நாடுகளின் வரிசையில் – சர்வதேச ரீதியாக இலங்கை 127ஆ இடத்துக்கு இவ்வருடம் தள்ளப்பட்டுள்ளது. ‘எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு’ மேற்கொண்ட தரப்படுத்தலுக்கு அமைய, 2020ஆம் ஆண்டில் மேற்படி இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது. 180 நாடுகள் இந்தத் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் நோர்வே முதலாம் இடத்தையும், பின்லாந்து இரண்டாம் இடத்தையும்,

மேலும்...
வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு

வெலிசர கடற்படை வைத்தியசாலையில் உயிரிழந்த அதிகாரிக்கு எலிக் காய்ச்சல்; கொரோனா இல்லை: அறிக்கையில் தெரிவிப்பு 0

🕔26.Apr 2020

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்த கடற்படை இளம் அதிகாரி, எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார் என, கடற்படை தெரிவித்துள்ளது. ஆயினும், இந்த அதிகாரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில், இவரின் மரணம் தொடர்பில் கடற்படை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அந்த

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம் 0

🕔26.Apr 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தற்போது வேறு கட்சிகளில்

மேலும்...
அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு

அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு 0

🕔26.Apr 2020

– பாறுக் ஷிஹான் – அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். நேற்று சனிக்கிழமை குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் சென்று பார்வையிட்ட

மேலும்...
கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது

கொரோனா நோயாளர் எண்ணிக்கை நாட்டில் 450 ஐ கடந்தது 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 452ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாதிப்புக்குள்ளானவர்களில் 118 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உலகளவில் 28 லட்சத்து 30 ஆயிரத்து 51 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 792,778 பேர் குணமடைந்த நிலையில்,

மேலும்...
ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன? 0

🕔25.Apr 2020

கொரோனா தொற்றால் நாயொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.கே. சரத் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்ட ஜா-எல -சுதுவெல பகுதியில் உள்ள நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியானது. இதில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்