அட்டாளைச்சேனை மடுவத்தில் சுகாதாரம் இல்லை; இழுத்து மூட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உத்தரவு

🕔 April 26, 2020

பாறுக் ஷிஹான்

ட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில் சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை குறித்த மாடறுக்கும் மடுவத்துக்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சகிதம் சென்று பார்வையிட்ட பின்னர், குறித்த மடுவத்தை மூட நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போது நோன்பு மாதம் ஆரம்பமாகி உள்ள நிலையில், சுத்தமான இறைச்சிகளை வழங்குவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் குறித்த மடுவத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் திறந்து விடுவதாகவும் பணிப்பாளர் மேலும் கூறினார்.

அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளருக்கும் இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கும் இடையில், நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணியாற்றும் பொறுச் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர்; அட்டாளைச்சேனை மடுவத்தில் மாடுகளை அறுக்கும் போது சுகாதாரம் பின்பற்றப்படுவதில்லை என்றும், அதனை தான் கவனிப்பதில்லை எனவும் சர்ச்சைக்குரிய தகவல் ஒன்றிக் கூறியிருந்தார்.

இவர் இவ்வாறு கூறியிருந்தமை பேஸ்புக் இல் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

பின்னர் இந்த விடயத்தை புதிது செய்தித்தளம் செய்தியாக்கி, உரியவர்களிடம் சென்றடையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: “மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை; அதை நான் கண்டு கொள்வதுமில்லை”: அட்டாளைச்சேனை சுகாதார பரிசோதகரின் வாக்குமூலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்