Back to homepage

மேல் மாகாணம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம்

கொரோனாவுக்கு பலியாகதவரின் பெயரை, கொரோனா ‘மரணக் கணக்கில்’ ஏன் இன்னும் பதிந்து வைத்திருக்கிறார்கள்: எழுகிறது விசனம் 0

🕔10.May 2020

– அஹமட் – கொரோனா தொற்று காரணமாக இறுதியாக (09ஆவதாக) இறந்ததாகக் கூறப்பட்ட பெண்ணுக்கு, உண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என, ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் – கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 09 என குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்

மேலும்...
கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன்

கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிரான வழக்கில், ஊதியம் பெறாமல் ஆஜராகிறார் சட்டத்தரணி சுமந்திரன் 0

🕔10.May 2020

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை எரிக்க வேண்டும் என்கிற கட்டாய நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முஸ்லிம் அமைப்பொன்று தொடர்ந்துள்ள வழக்கில், ஊதியங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ஆஜராகுவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் முன்வந்துள்ளார். ‘முஸ்லிம் கவுன்சில் ஒஃப் சிறிலங்கா’ எனும் அமைப்பு, மேற்படி வழக்கை தாக்கல் செய்துள்ளது. மேற்படி

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் தீர்மானத்துக்கு எதிராக, சம்பிக்க மற்றும் குமார வெல்கம உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔9.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை ஆட்சேபித்து, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளனர். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை

மேலும்...
வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம்

வர்த்தமானியை திருத்துங்கள்; முஸ்லிம்களின் பிரேதங்களை எரிப்பது வேதனையளிக்கிறது: ஜனாதிபதிக்கு றிசாட் கடிதம் 0

🕔9.May 2020

கொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட முறையாக குறிப்பிட்டு, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளை கொரோனா தொற்று காரணமாக மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை

மேலும்...
எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பொய் என உறுதியானது; கோட்டாவின் பிரஜாவுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு 0

🕔9.May 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கியுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டோர் தொடர்பான இந்த காலாண்டுக்கான பெயர்ப் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையல்லவென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதும், ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது,

மேலும்...
மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம் 0

🕔8.May 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அரசாங்கத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை – அரசாங்கத்தினுடையது அல்ல என்றும், அது ஜயசுந்தரவின் தனிப்பட்ட கோரிக்கை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “பொருளாதாரம் தடைப்பட்டுள்ளதால் அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் 0

🕔8.May 2020

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு;

மேலும்...
11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்

11ஆம் திகதி நாடு வழமைக்குத் திரும்புகிறது; தனியார் நிறுவனங்களை காலை 10 மணிக்கு ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔8.May 2020

மக்களின் அன்றாட வாழ்க்கையை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மக்களின் வாழ்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் முதலாம் கட்டமாக அரச

மேலும்...
கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம்

கொரோனாவால் மரணிக்காத முஸ்லிம் தாயின் உடலை தகனம் செய்தமை, இனவாத பாரபட்சம்: மனோ கணேசன் கண்டனம் 0

🕔8.May 2020

கொரோனாவினால் மரணிக்காத கொழும்பு – முகத்துவாரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இலங்கைத் தாயின் உடல், முறை தவறி தகனம் செய்யப்பட்டமைக்காக, ஒரு இலங்கையனாக வேதனை அடைகிறேன் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் இலங்கையர் சமூகத்தின் மீதான இந்த இனவாத பாரபட்சத்தைக் கண்டித்து, இந்த நடத்தைக்கு எதிராக பகிரங்கமாக

மேலும்...
பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு 0

🕔8.May 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள்

மேலும்...
தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு

தேர்தலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றில் மேலும் ஒரு மனு 0

🕔6.May 2020

பொதுத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஓர் அடிப்படை உரிமை மனு இன்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான நிலையம் – இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல்

மேலும்...
முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும்

முஸ்லிம் அரசியல்வாதிகள் கையூட்டல் பெற்றிரா விட்டால், மஹிந்தவிடம் முஸ்லிம்களுக்கும் மரியாதை இருந்திருக்கும் 0

🕔6.May 2020

– சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் – “அரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர் – முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள்” என, முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூர் தெரிவித்துள்ளார். “தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து நமது நிலைமையை சிக்கலாக்கிக்

மேலும்...
மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு

மகன் விடயத்தில் ஜனாதிபதியிடம் உதவி கோரியதாக வெளியான செய்தி: தேர்தல்கள் ஆணையாளர் மறுப்பு 0

🕔6.May 2020

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவின் புதல்வர் விதுர காசியப்ப தேசப்பிரிய இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்த விமானத்தில் தாயகம் திரும்பியுள்ளார். இவர் அயர்லாந்தில் பட்டப்பின்படிப்பினை மேற்கொண்டு வருகின்றார். இலங்கைக்கு வருகை தந்த அவர் – தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் கல்வி கற்கும் அவரை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு, ஜனாதிபதியின் உதவியை தேர்தல்கள்

மேலும்...
கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர்

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு, நோய் அறிகுறிகள் தெரிவதில்லை: சுகாதார அமைச்சர் 0

🕔5.May 2020

எமது நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். “எதிர்காலத்தில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்தினாலும், அறிகுறிகள் தென்படாத நோயாளர்கள் உங்களோடு நடமாட வாய்ப்பு உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “தொற்றில் அதிகரிப்பு ஏற்பட்டால், சமூகத்தில் உங்களுக்கும் தொற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்