பொதுத் தேர்தலுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மனுவை, எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுக்குமாறு மற்றொரு மனு

🕔 May 8, 2020

பொதுத் தேர்தல் வர்த்தமானிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 11, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களில் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுசார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொது தேர்தலை நடத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வலுவிலக்க செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கடந்த 06 ஆம் திகதி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்