ஊடக சுதந்திரத்தில் உகண்டா, சிம்பாவே நாடுகளை விடவும் இலங்கை பின்னடைவு: 127ஆவது இடத்துக்கு வீழ்ந்தது

🕔 April 26, 2020

– முன்ஸிப் அஹமட் –

டக சுதந்திரமுள்ள நாடுகளின் வரிசையில் – சர்வதேச ரீதியாக இலங்கை 127ஆ இடத்துக்கு இவ்வருடம் தள்ளப்பட்டுள்ளது.

‘எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு’ மேற்கொண்ட தரப்படுத்தலுக்கு அமைய, 2020ஆம் ஆண்டில் மேற்படி இடம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

180 நாடுகள் இந்தத் தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் நோர்வே முதலாம் இடத்தையும், பின்லாந்து இரண்டாம் இடத்தையும், டென்மார்க் 03ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தத் தரப்படுத்தலில் உகண்டா மற்றும் சிம்பாவே போன்ற நாடுகளையும் விட, ஊடக சுதந்திரத்தில் இலங்கை – பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு 2019 ஆம் ஆண்டு மேற்கொண்ட தரப்படுத்தலில் இலங்கை 126ஆவது இடத்தையும், 2018ஆம் ஆண்டின் தரப்படுத்தலில் 131ஆவது இடத்தையும் பெற்றிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்