Back to homepage

மேல் மாகாணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம்

அரசாங்கத்துக்கும், சஜித் அணியினருக்கும் இடையில் சந்திப்பு; தமது நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் 0

🕔6.Apr 2020

அரசாங்கத்துக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினருக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கொரோனா நோய்க்கிருமி பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இதன்போது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சறிபால டி சில்வா,

மேலும்...
கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல்

கொரோனா தொடர்பில் வதந்தி பரப்பிய பெண்ணுக்கு விளக்க மறியல் 0

🕔6.Apr 2020

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் சமூக ஊடகங்கள் மூலம் போலி தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாதுவ பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் மேற்படி பெண் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம்

கொரோனா தொற்று காரணமாக, இலங்கையர் ஒருவர் அவுஸ்ரேலியாவில் மரணம் 0

🕔5.Apr 2020

இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கொரோனா பாதிப்பு காரணமாக அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் மரணமடைந்துள்ளார். இவ்வாறு மரணமடைந்தவர் 52 வயதுடைய ஆண் என தெரியவருகிறது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை கொரோனாவினால் 171 பேர் பாதிக்கப்பட்டதாக (இன்று மாலை 06 மணி வரை) சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் செய்திகள் குறிப்பிடுகின்றன. நாட்டில் நோய்த் தொற்றுக்குள்ளான 05

மேலும்...
சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள்

சில வகையான அரச உதவிக் கொடுப்பனவுகள் நாளை வழங்கப்படும்; வீடுகளுக்கு வந்து அதிகாரிகள் வழங்குவார்கள் 0

🕔5.Apr 2020

விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள், சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் 100 வயதுக்கு மேற்பட்டோருக்கான உதவித் தொகைகள், நாளை திங்கள்கிழமை (06ஆம் திகதி) வழங்கி வைக்கப்படவுள்ளன. பிரதமர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்தந்தப் பகுதி கிராம சேவகர்கள் மூலமாக, பயனாளிகளின் வீடுகளில் வைத்து, இக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படும். அதேவேளை

மேலும்...
ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

ஊரங்குச் சட்டத்தை மீறிய 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது 0

🕔5.Apr 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறுகின்றவர்களை கைது செய்தும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 1245 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 336 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து

மேலும்...
06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு

06 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம், நாளை தளர்வு 0

🕔5.Apr 2020

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, ஏப்ரல் 06ஆம் திகதி, காலை 6.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பின்னர் நாளைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அந்த மாவட்டங்களில் ஊரடங்கு நடைமுறைக்கு வரும்.

மேலும்...
சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள்

சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள் 0

🕔5.Apr 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு தருணத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை என்றும், தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது

மேலும்...
நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு

நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு 0

🕔5.Apr 2020

சிறைக் கைதிகள் 2691 பேருக்கு, மார்ச் 17ஆம் திகதி முதல் நேற்று 04ஆம் திகதி வரையிலான காலப் பகுதி வரை, நிவாரண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இந்த விடுதலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை வளாகத்துக்கு ஜனாதிபதி மேற்கொண்ட

மேலும்...
கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்

கொரோனா: இறந்தவரை புதைக்க அல்லது எரிக்க முடியும்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம் 0

🕔3.Apr 2020

கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றினால் இறந்த நோயாளிகளின் உடல்களை புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ முடியும் முடியும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவுக்கு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பாக, அதன் செயலாளர் டொக்டர் ஹரித்த அத்துகல எழுதிய கடிதமொன்றிலேயே இதனைக்

மேலும்...
உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை 0

🕔3.Apr 2020

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்தப் பிணையினை வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த

மேலும்...
கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு 0

🕔3.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார். ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா

மேலும்...
வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை

வசந்தம் ரி.வி மற்றும் வானொலியில் பணியாற்றும் முஸ்லிம்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி, கட்டாய விடுமுறை 0

🕔2.Apr 2020

– அஹமட் – சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் கீழ் (ஐ.ரி.என்) இயங்கும் வசந்தம் ரி.வி மற்றும் வசந்தம் எப்.எம். வானொலி ஆகியவற்றில் கடமையாற்றும் முஸ்லிம் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றைக் காரணம் காட்டியே அங்கு பணியாற்றும் முஸ்லிம்களுக்கு மட்டும், இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, அங்கு பணியாற்றும் அலுவலர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்

மேலும்...
நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Apr 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி மரணமடைந்த நபருடன் தொடர்புகளை வைத்திருந்த 300 பேர், புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொரோனா

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்