நேற்று மரணித்தவரின் மருமகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

🕔 April 2, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்த மருதானையைச் சேர்ந்த நபரின் மருமகன் மற்றும் பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்படி மரணமடைந்த நபருடன் தொடர்புகளை வைத்திருந்த 300 பேர், புனானை தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வடைந்துள்ளது.

இருந்தபோதும் இவர்களில் 21 பேர் சுகமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments