ஜா-எல பகுதி நாய்க்கு கொரோனா: செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

🕔 April 25, 2020

கொரோனா தொற்றால் நாயொன்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் கே.கே. சரத் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்ட ஜா-எல -சுதுவெல பகுதியில் உள்ள நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்தியொன்று வெளியானது.

இதில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும், விலங்குகளுக்கு கொரோனா தொற்று உண்டா என்பது தொடர்பில் சோதணை செய்வதற்கான உபகரணங்கள் நாட்டில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்