தலைப்புச் செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினர் தொகை அதிகரிப்பு

கடற்படையினர் 226 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த 147 பேரும் விடுமுறையில் சென்ற 79 பேரும் இவ்வாறு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் கூறியுள்ளார்.

கடற்படை வீரர்களுடன் நெருங்கிப் பழகிய 184 பேர் பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 622 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இவர்களில் 134 பேர் குணமடைந்துள்ளனர்.