Back to homepage

பிரதான செய்திகள்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம்

மூன்று வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி; சீசெல்ஸ் நாட்டில், மஹிந்த திறந்த BOC கிளையின் பரிதாபம் 0

🕔13.Apr 2016

சீசெல்ஸ் நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்ட இலங்கை வங்கிக் கிளையில் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே தமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த இலங்கை வங்கிக் கிளையானது 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டது.

மேலும்...
பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை

பாதாள உலகத்தின் ஏகபோக உரிமைக்கான மும்முனைச் சண்டை தீவிரம்; பொலிஸார் நடவடிக்கை 0

🕔13.Apr 2016

இலங்கையில் செயற்பட்டு வரும் பாதாள உலக நடவடிக்கைகளின் ஏகபோக உரிமையினைக் கைப்பற்றிக் கொள்ளும் பொருட்டு, அதனுடன் தொடர்புடைய மூன்று குழுக்கள், மோதல்களில் ஈடுபட்டு வருவதாக, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்ற செயல்களை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகவே, அவர்கள் இவ்வாறான சண்டையில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில், மூன்று குழுக்களுனும் தொடர்புடைய 40 பேரை தேடும் பணியில் பொலிஸ் விசேட குழுவினர்

மேலும்...
சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல்

சம்மாந்துறையில் இளைஞன் கொலை; காதல் விவகாரம், காரணம் என தகவல் 0

🕔13.Apr 2016

இளைஞர் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சம்மாந்துறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. சம்மாந்துறை சென்னல் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சுலைமாலெப்பை அப்துல் அலி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இரு இளைஞர்களுக்கிடையே கைத்தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கம் பின்னர் கொலையில் முடிவடைந்துள்ளது. பெண் ஒருவர் மீதான காதல்தான் இந்தப் பிரச்சினைக்குக்

மேலும்...
ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை

ஈழத்தை அமைக்க, வட மாகாணசபை முயற்சிக்கும்: மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை 0

🕔13.Apr 2016

ஈழத்தைஉருவாக்க வடமாகாண சபை எதிர்காலத்தில் முயற்சிக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் வடமாகாண சபை முன்வைக்கும் யோசனைகளைப் பார்க்கும் போது அவ்வாறுதான் எண்ணத் தோன்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் எதிர்பார்ப்பு ஒருபோதும் நிறைவேறாது என்றும், மாகாணங்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் எந்தவொரு மாகாண சபைக்கும்அதிகாரம் கிடையாது என்றும் முன்னாள்

மேலும்...
மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை

மீண்டும் நிதி மோசடிக் குற்றச்சாட்டு; யோசிதவைச் சுற்றி விரிகிறது வலை 0

🕔13.Apr 2016

யோசித்த ராஜபக்ஷ, மீண்டும் நிதி மோசடிக் குற்றசாட்டில் சிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. நிதி மோசடி தொடர்பான பொலிஸ் பிரிவு இந்தக் குற்றச்சாட்டினை மேற்கொள்ளவுள்ளது. சி.எஸ்.என். தொலைக்காட்சிக்கு முதலீடு செய்வதற்காக, யோசித்தவுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்பதை வெளிப்படுத்தாமை காரணமாக, அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில், பல மில்லியன்கள் செலவில் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் கட்டப்பட்டுள்ள

மேலும்...
விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா பயணமானார் கோட்டா 0

🕔12.Apr 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கு திடீரென பயணமாகியுள்ளார். எதிர்வரும் 18ஆம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கோட்டபாய அவசரமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தியமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்ளும் பொருட்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

மேலும்...
அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு

அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு 0

🕔12.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியா்களின் முன் கூட்டிய தமிழ் – சிங்கள புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. ஓட்டப்போட்டி, தலையணைச் சண்டை, கயிறிழுத்தல், கிறிக்கட் போட்டி ஆகியவை

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமனம் 0

🕔12.Apr 2016

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவை, பதில் பொலிஸ் மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் நேற்று திங்கட்கிழமை தினம் ஓய்வு பெற்றுச் சென்றமையினை அடுத்து, பதில் பொலிஸ் மா அதிபராக விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபராக, ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கக்கோன்

மேலும்...
பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

பசில் ராஜபக்ஷவுக்கு எக்கச்சக்க பாதுகாப்பு வழங்கியமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔12.Apr 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தின் போது கூடுதல் பாதுகாப்பு வழங்கியமை குறித்து, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி ஆணைக்குழுவின்

மேலும்...
219 ‘வெறி’யர்கள், ஒரே நாளில் கைது

219 ‘வெறி’யர்கள், ஒரே நாளில் கைது 0

🕔11.Apr 2016

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 219 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் சாரதிகளே இவர்களில் அதிகமானோர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை

மேலும்...
புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல்

புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔11.Apr 2016

புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நரேஹேன்பிட்டி பகுதியிலுள்ள விரைவு தபால் தலைமையகத்தில் வைத்து, லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக

மேலும்...
பழமையின் ருசி

பழமையின் ருசி 0

🕔11.Apr 2016

– மப்றூக் – ‘ஆசியார்’ என்றுதான் அவரை பலரும் அழைப்பார்கள். அவர் ஒரு மீன் வியாபாரி. சொந்த இடம் அட்டாளைச்சேனை. அற்புதமான பொல்லடிக் கலைஞர். ஊரில் பாரம்பரிய கலை விழாக்கள் நடைபெறும் போது, பொல்லடி நிகழ்வுகளும் தவறாமல் இடம்பெறும். பொல்லடி நிகழ்வுகள் இருந்தால் – அங்கே ஆசியார் இருப்பார். ஆனால், இப்போது ஆசியார் இல்லை. அவர்

மேலும்...
கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம் 0

🕔10.Apr 2016

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீனாவுக்கு  குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்தின் தரத்துக்கு முன்னேற்றிக் கொண்டு செல்வதே தமது நோக்கமென்றும் அவர் கூறினார். சீன விஜயத்தை நிறைவுசெய்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் ரணில், சீன விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தமது உத்தியோகபூர்வ

மேலும்...
18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார்

18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார் 0

🕔10.Apr 2016

இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன தலைவரும், உலகிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளமையானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்காக அவர் பல கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அனந்த்

மேலும்...
முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம் 0

🕔10.Apr 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக விதித்தார். பதுளை நீதவான் நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட முச்சக்கர வண்டியின் சாரதி நேற்று முன்தினம் ஆஜர் செய்யப்பட்டபோது, பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி கடுமையாக எச்சரித்ததுடன் மூவாயிரம் ரூபாவினை அபராதமாகவும் விதித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்