18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார்

🕔 April 10, 2016

Anath ambani - 01ந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன தலைவரும், உலகிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108 கிலோ எடையை குறைத்துள்ளமையானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்காக அவர் பல கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தினமும் 21 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட அனந்த் அம்பானி – யோகா, உடற்பயிற்சிகளை தனது அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கத் தொடங்கினார். மேலும் தனது உணவு பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்கைளயும் கொண்டுவந்தார். கொழுப்புசத்து இல்லாத உணவு வகைகளையே உட்கொண்டார்.

நாட்பட்ட ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அவர், அந்நோய்க்காக எடுத்துக்கொண்ட மருத்துவத்தின் காரணமாக, அவரின் உடல் எடை அதிகரித்தது.

இந்நிலையில் தனது 21ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு முன்பாக, தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டுமெனத் தீர்மானித்து, அதற்கான தீவிர பயிற்சிகளிலும ஈடுபட்டார். இது வெற்றியளித்துள்ளது.

இந்த உடல் எடை குறைப்பு முற்றிலும் இயற்கை முறையில் எட்டப்பட்டது எனவும், இதனால் அவருக்கு எந்தவித பக்கவிளைகளும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.

அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு, அனந்த் அம்பானியின் இந்த எடை குறைப்பானது, நம்பிக்க தருவதாக உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்