219 ‘வெறி’யர்கள், ஒரே நாளில் கைது

🕔 April 11, 2016

Drunk & driving - 01து போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 219 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் சாரதிகளே இவர்களில் அதிகமானோர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விஷேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கிணங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரையில், 291 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.

126 மோட்டார் சைக்கிள் சாரதிகள், 68 முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கார், லொரி, வேன் சாரதிகள் கைது செய்யப்பட்டவர்களுள் அடங்குகின்றனர்.

Comments