Back to homepage

பிரதான செய்திகள்

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே 0

🕔5.Dec 2016

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறி, போலி ஆவணமொன்றினைத் தயாரித்து, அதை வெளிப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திஸ்ஸ

மேலும்...
ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி 0

🕔5.Dec 2016

“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர். அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார். வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு

மேலும்...
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி 0

🕔4.Dec 2016

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை  பிற்பகல் ஜெயலலிதாவுக்குகு மாரடைப்பு ஏற்பட்டமையினையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

மேலும்...
மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண் 0

🕔4.Dec 2016

– நஸீஹா ஹஸன் – மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலீடான புதிய சட்ட உருவாக்கம், முஸ்லிம்களின் சுதந்திரத்தை முடக்குமா: அலசுகிறார் பஷீர் 0

🕔4.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர் – முஸ்லிம் காங்கிரஸ்) – தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக , பயங்கரவாதத்தை முறியடிக்கும் புதிய சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சட்டம் , இனப் பிரச்சினை ஒரு போராக உருவெடுத்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை பயன்படுத்தி நீதிக்குப் புறம்பான கைது தொடக்கம்

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்: நாடாளுமன்றில் றிசாத் நன்றி தெரிவிப்பு 0

🕔4.Dec 2016

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடாளுமன்றில் கூறினார். கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்துக்கும், எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இதன்போது

மேலும்...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0

🕔4.Dec 2016

– யூ.கே. காலீத்தீன் –  கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்

மேலும்...
ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம்

ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம் 0

🕔3.Dec 2016

– க. கிஷாந்தன் – ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியிலிருந்து, பத்தனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஜமாத் சென்றிருந்த குழுவிலுள்ள இளைஞரொருவர், இன்று சனிக்கிழமை அங்குள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது,  நீரில் மூழ்கி உயிரிழந்தார். பத்தனை பிரதேசத்துக்கு 14 பேர் கொண்ட மேற்படி குழுவினர் நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்தனர். இந்த நிலையில் இவர்களில் சிலர் இன்று சனிக்கிழமை

மேலும்...
ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு 0

🕔3.Dec 2016

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞானசார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும், அண்மையில் அவர் நடத்திய ஊடக சந்திப்பில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில்

மேலும்...
பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை 0

🕔3.Dec 2016

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள் பயணிக்க முடியா நிலைவரம் உருவானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு நகரில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.  இந்நிகழ்வு சமூகங்களிடையே அச்ச உணர்வை

மேலும்...
மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு

மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு 0

🕔3.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய – எழுத்து மூலம்

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை: நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு 0

🕔3.Dec 2016

– பாறுக் ஷிஹான் –வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என்றும் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என, தமிழ் தேசியக்

மேலும்...
நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்

நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல் 0

🕔3.Dec 2016

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை  மேற்கொண்டனர். வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட

மேலும்...
கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம்

கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம் 0

🕔2.Dec 2016

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைப்

மேலும்...
40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித

40 மில்லியன் ரூபாய் வாகனம்; இறக்குமதி செய்த அமைச்சர் யார்: தெரியாது என்கிறார் ராஜித 0

🕔2.Dec 2016

அமைச்சர் ஒருவர் 40.1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் S300 ரக கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். ஆனால், குறித்த அமைச்சர் யார் என அறிய முடியவில்லை என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரின் விபரங்கள் மற்றும் படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. தற்போது, குறித்த கார் –  பத்தரமுல்லையிலுள்ள அமைச்சர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் காணப்படுவதாகக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்