ஓய்வு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று, நான் தொழில் வழங்குவதில்லை: நாமலுக்கு சஜித் பதிலடி

🕔 December 5, 2016

sajith-099“நான் ஓய்வு விடுதிகளுக்கு நபர்களை கொண்டு சென்று தொழில் வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு தொழில் வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர்.

அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என்று நாமல் ராஜபக்ஷவை பார்த்து, அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில்  தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் வீடமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின் போது சஜித் பிரேமதாஸவை நாமல் ராஜபக்ஷ விமர்சித்தபோது, அதற்கு பதிலடி வழங்கும் வகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் சஜித் கூறினார்.

குறித்த விவாதம் இடம்பெற்ற தினத்தன்று முழு நாளும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்திலேயே இருந்தார்.

இதன்போது சஜினின் ஹம்பாந்தோட்டை காணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சனம் செய்தார்.

“ஹம்பாந்தோட்டையில் ரேஸ் கோஸ் நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 ஏக்கர் காணியில், அமரதேவ பெயரில் கிராமம் ஒன்றை அமைக்க நான் நிதி ஒதுக்கினேன். அதற்கென்றால் கோவித்துக் கொள்ள வேண்டாம்” என சஜித், நாமலை பார்த்து கிண்டலாகக் கூறினார்.

இதன்போது நாமல் ராஜபக்ஷ; “உயரத்தைப் பார்த்தும், தோற்றம் மற்றும் வெள்ளையா கருப்பா என பார்த்தும் அல்லவா தொழில்வாய்ப்புகளை வழங்குகின்றீர்கள்”  என சஜித் பிரேமதாஸவை நோக்கிப் பேசினார்.

இதற்குப் பதிலளித்த சஜித் பிரேமதாஸ; “என்ன குறைப்பாடுகள் இருந்தாலும், நான் ஓய்வு விடுதிகளுக்கு கொண்டு சென்று தொழில் வாய்ப்புகளை வழங்குவதில்லை. அவ்வாறு அழைத்து செல்லப்பட்டு பதவி வழங்கிய முறை குறித்து ஹம்பாந்தோட்டையில் அனைவரும் அறிந்துள்ளனர்.

அதேபோன்று மாளிகை, நிலத்தடி வீடுகளுக்கு அழைத்து சென்றும் தொழில் வாய்ப்புகளை வழங்கவில்லை” என நாமலுக்கு சஜித் பதிலடி வழங்கினார் எனத் தெரிவிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்