நாடாளுமன்றம் நோக்கி செல்ல முற்பட்டவர்கள் மீது, கண்ணீர் புகை தாக்குதல்

🕔 December 3, 2016

protest-01234ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவாறு நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்வதற்கு முயற்சித்த ஒன்றிணைந்த எதிரணியினருக்கு ஆதரவான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது, பொலிஸார் – கண்ணீர்புகை குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் ஆகியவற்றினை இன்று சனிக்கிழமை  மேற்கொண்டனர்.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதம் இன்று இடம்பெற்று வரும் நிலையில் மேற்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போதே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஒண்றிணைந்த எதிரணியினரின் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் செல்ல முற்பட்ட போதே, குறித்த தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு கோரியே, குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டுமன்றி பொலிஸாரும் பாதிக்கப்பட்டனர்.protest-01235

Comments

புதிது பேஸ்புக் பக்கம்