மாவனல்லை ஸாஹிராவுக்கு 4.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான பஸ்ஸை வழங்கிய முஸ்லிம் பெண்

🕔 December 4, 2016
zahira-mawanenlle-01– நஸீஹா ஹஸன் –

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரிக்கு 4.2 மில்லியன் ரூபா பொறுமதியான பஸ் வண்டியொன்றினை கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.
குறித்த பஸ் வண்டியினை அன்பளிப்புச் செய்தவர் மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்தவராவார். 

மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம். நபீஸா உம்மா என்பவர் கல்லூரிக்குத் தேவையான பஸ் வண்டியை கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.
பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது பஸ் வண்டியின் சாவியினை கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ஜவாட் (நளீமி) யிடம்  கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐ.தே.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷீம், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கல்லூரி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்லூரி அபிவிருத்திக் குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை,  கல்லூரிக்கு மேலதிக கணினி அறை மற்றும் வாசிகசாலை போன்றவற்றுக்கான நவீன வசதிகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் குறித்த தினம் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.zahira-mawanenlle-02 zahira-mawanenlle-03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்