டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு

🕔 December 4, 2016

dengue-022– யூ.கே. காலீத்தீன் – 

ல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும் வாடிகள் போன்றவை கல்முனை மாநகர சபையின் கனரக வாகனங்களைக் கொண்டு துப்பரவு செய்யப்பட்டன.

இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ. இஸ்ஸதீன், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் என். ஆரிப், திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ரீ.எம். மர்சூக், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். கே.எல். ரயீஸ், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல். பாரூக், கல்முனை மாநகர விஷேட ஆணையாளர் ஜே. லியாகத் அலி உட்பட பிராந்திய மலேரியா தடுப்பு இயக்க காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கரையோரம் பேனல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மீன்பிடி திணைக்கள உத்தியோகஸ்தர்கள், கல்முனை பொலிஸார், சமூகசேவை  அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து இவ்வேலைத்திட்டத்தில் பங்குகொண்டனர்.dengue-011 dengue-033

Comments

புதிது பேஸ்புக் பக்கம்