Back to homepage

அம்பாறை

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு 0

🕔9.Nov 2017

– எம்.வை. அமீர்-விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான 

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு

தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு 0

🕔8.Nov 2017

தேர்தல் பிரசார செலவுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமை தொடர்பான செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை ஏற்பாடு செய்த இச் செயலமர்வுக்கான இணை அனுசரணையினை கொழும்பினைத் தளமாகக் கொண்ட தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வழங்கியது.அரசியல் விஞ்ஞானத் துறை

மேலும்...
ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை 0

🕔8.Nov 2017

– எம்.ஜே.எம். சஜீத் –கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார் 0

🕔8.Nov 2017

– முன்ஸிப் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார். அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த

மேலும்...
முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர்

முஸ்லிம் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு, எமது சுயேட்சைக் குழுவில் இடம் கிடையாது: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் 0

🕔6.Nov 2017

–   ஏ.எச். சித்தீக் காரியப்பர் – “எதிர்வரும் உள்ளராட்சி சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்காக போட்டியிடுவதற்கு சாய்ந்தமருதுவிலிருந்து சுயேட்சைக் குழு ஒன்றை நாங்கள் களத்தில் இறக்கவுள்ளோம். எமது சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவோர் தற்போதுள்ள முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் இருக்கக் கூடாது. எமது சுயேட்சைக் குழுவில் அவ்வாறானவர்கள் போட்டியிட வேண்டுமாயின் தாங்கள் தற்போது அங்கத்துவம் 

மேலும்...
பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம்

பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம் 0

🕔6.Nov 2017

– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பு  ஆரம்பிப்பதற்கான  அனுமதி அடுத்த வருடம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.அதேவேளை,  ஹிக்மா வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு, மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.பாலமுனை அல் ஹிக்மா

மேலும்...
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல்

சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் வேண்டாமென கூறிய, பிரதியமைச்சர் ஹரீசின் நிதியை, வேறு பள்ளிவாசல்கள் கோருவதாக தகவல் 0

🕔4.Nov 2017

– அஹமட் – சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு பிரதியமைச்சர் ஒதுக்கீடு செய்த 15 லட்சம் ரூபா பணத்தினை ஏற்றுக் கொள்வதில்லை என, அந்தப் பள்ளிவாசல் நிருவாகம் அறிவித்துள்ள நிலையில், சாய்ந்தமருதிலுள்ள வேறு சில பள்ளிவாசல்கள் அந்த நிதியினை தமக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதியமைச்சர் தரப்பு இந்தத் தகவலை ‘புதிது’ செய்தித் தளத்திடம் தெரிவித்தது.

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதி நிர்மாணத்தில் மோசடி; மக்கள் புகார் 0

🕔3.Nov 2017

– அஹமட் –அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் பல்வேறு மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு, பாரிய குறைபாடுகள் உள்ளதாகவும் அப்பகுதிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த வீதி கொங்றீட் வீதியாக உள்ள நிலையில், அதனை காபட் வீதியாக மாற்றும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகிறது. வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியில், இந்த

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது

பிரதியமைச்சர் ஹரீசின், நிதி ஒடுக்கீடு தேவையில்லை; 15 லட்சம் ரூபாவை திருப்பியது சாய்ந்தமருது 0

🕔3.Nov 2017

– எம்.வை. அமீர் – விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சாய்ந்தமருது பள்ளிவாசல் அபிவிருத்திக்காக ஒதுக்கிய 15 லட்சம் ரூபா நிதியினையும் ஏற்பதில்லை என, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சிசபையை வழங்குவதற்குத் தடையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான

மேலும்...
கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம் 0

🕔2.Nov 2017

– அஹமட் – புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06 வட்டாரங்களாகவும், கல்முனை தமிழர்கள் பகுதி 07 வட்டாரங்களாகவும், மருதமுனை 03, நற்பிட்டிமுனை 02 மற்றும் சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்றைய சாய்ந்தமருது பிரகடனத்துக்கு அமைவாக

மேலும்...
தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும்

தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும் 0

🕔1.Nov 2017

– ஹபீல் எம். சுஹைர் –சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை போன்று, அட்டாளைச்சேனை மக்களும் தமக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்று களத்தில் இறங்க வேண்டும்.அட்டாளைச்சேனைக்குச் சொந்தமான தேசியப்பட்டியல், சல்மானுக்கு வழங்கப்பட்டு அதன் காலம் கரைந்து

மேலும்...
உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம்

உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, சகல தேர்தல்களிலும் சுயேட்சையில் போட்டி; சாய்ந்தமருது பிரகடனத்தில் தீர்மானம் 0

🕔1.Nov 2017

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாசல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்தும் தீர்மானமொன்று இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல்

மேலும்...
மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை

மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை 0

🕔1.Nov 2017

– எஸ். எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசம் முழுவதும் இன்று புதன் கிழமை கடையடைப்பு மற்றும் மாநகரசபை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்முனைப் பிரதேசத்தின் அரசாங்க காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றன மூடப்பட்டுள்ளபோதும் பஸ் போக்குவரத்து சீராக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும்

மேலும்...
விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார் 0

🕔31.Oct 2017

– அஹமட் – கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர்

மேலும்...
கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை

கல்முனையில் கடையடைப்பு பேராட்டத்துக்கு அழைப்பு: உச்சமடைகிறது உள்ளுராட்சி பிரச்சினை 0

🕔31.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – கல்முனை பிரதேசத்தில் நாளை புதன் கிழமையும், நாளை மறுநாளும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம், இதற்கான அழைப்பினை விடுத்துள்ளது. கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தை –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்