ஆறுகள் போல் காட்சியளிக்கும் கோணாவத்தை வீதிகள்; கவனிப்பார் யாருமில்லை

🕔 November 8, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

டந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் அட்டாளைச்சேனை பிரதேச  கோணாவத்தை பிரதேசத்திலுள்ள அநேகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

கோணாவத்தை பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மோசமடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்படும் வீதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

கோணாவத்தை பிரதேசத்திலுள்ள ஒ.பி.ஏ. வீதி, கடற்கரை வீதி,  ஹாஜியார் வீதி, ஆர்.டி.டிஸ். வீதி, ஜப்பார் பொலிஸ் வீதி மற்றும் அந் – நூர் பாடசாலை பின் வீதி உள்ளிட்ட பல வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அப்பிரதேச மக்களும் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

கோணாவத்தை பிரதேசத்தில் 85 வீதமான மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், அக்கட்சியினால் அங்குள்ள வீதிகள் உட்பட எந்தவிதமான உட்கட்டமைப்பு அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படவில்லை.

நீண்டகாலமாக சேதமுற்றுள்ள இவ்வீதிகள் தொடர்பில் யாரும் கவனத்திற்கொள்ளாமை தங்களது கிராமத்தை புறக்கணிக்கும் செயற்பாடு எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பிரயாணம் செய்வதற்கு உகந்தவாறு மேற்குறித்த வீதிகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை செப்பனிட்டு தரவேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்