விளையாட்டு உபகரணங்களை, அஸ்மி அப்துல் கபூர் கையளித்தார்

🕔 October 31, 2017

– அஹமட் –

கிழக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பையின்  நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்துக்கு இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தருமான அஸ்மி அப்துல் கபூர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, இந்த விளையாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினை உதுமாலெப்பை ஒதுக்கியிருந்தார்.

ஹிஜ்றா விளையாட்டுக்கழகத்தினரிடம் மேற்படி உபகரணங்களை அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர்  அஸ்மி அப்துல் கபூர் இன்றைய தினம் கையளித்தார்.

இதேவேளை, குறித்த நிதியை ஒதுக்கித் தந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பைக்கும், இதன்போது அஸ்மி தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்