மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை

🕔 November 1, 2017

– எஸ். எல். அப்துல் அஸீஸ் –

ல்முனை பிரதேசம் முழுவதும் இன்று புதன் கிழமை கடையடைப்பு மற்றும் மாநகரசபை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கல்முனைப் பிரதேசத்தின் அரசாங்க காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றன மூடப்பட்டுள்ளபோதும் பஸ் போக்குவரத்து சீராக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.

கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளனம் இன்று புதன் மற்றும் நாளை வியாழன் ஆகிய தினங்களில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கல்முனை மாநகரசபையை 1987ஆம் ஆண்டு காலப்பகுதில் காணப்பட்டதனை போன்று நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரித்து, முன்னர் கல்முனை பட்டிண சபையாக இருந்த பிரதேசத்தினை கல்முனை மாநகர சபையாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் இடம்பெருவதாக அனைத்து பள்ளிவாயல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்