அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார்

🕔 November 8, 2017

– முன்ஸிப் –

க்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார்.

அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த அஹமட் லெப்பை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த மாதம் இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதற்கு முன்னதாக, மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விக் காரியாலயத்திலும் அவர் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் இவர் மரணித்துள்ளார்.

அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட – காலம் சென்ற அஹமட் லெப்பை; இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜின் சகோதரராவார்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்கவும், சுவர்க்கம் கிடைக்கவும் பிரார்த்திப்போம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்