தென்கிழக்கு பல்லைக்கழகத்தில் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு

🕔 November 9, 2017

– எம்.வை. அமீர்-

விரிவுரையாளர்களையும் ஏனைய ஆய்வாளர்களையும் ஆய்வு மற்றும் வெளியீடு சார்ந்த செயற்படுகளில்  ஊக்குவிக்கும் பொருட்டு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நூலகம், நேற்று புதன்கிழமை இரு செயலமர்வுகளை நடத்தியது.

உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிமுடைய வழிகாட்டலின் கீழ், ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பங்குபற்றுதலுடன், பதில் நூலகர் எம்.எம். மஸ்றூபாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விரு செயலமர்வுகளிலும் SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தின் வாடிக்கையாளர் வழிகாட்டியான  இந்தியாவைச் சேர்ந்த விஜய் சேக்கர் ரெட்டி வளவாளராக கலந்துகொண்டார்.

மில்லியன் கணக்கில் ஆய்வுக்கட்டுரைகள் சுட்டி செய்யப்பட்டு 22800 பருவ வெளியீகளை உள்ளடக்கிய SCOPUS எனும் புலமைசார் தரவுத்தளத்தில், இங்குள்ள சில விரிவுரையாளர்களும் தங்களது ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரித்து சிறந்து விளங்கும் அதேவேளை, ஏனைய ஆய்வாளர்களும் அவர்களது ஆய்வுக்கட்டுரைகளை மேற்படி தளத்தில் பதிவிடுவதன் மூலம் அதிக பயனை பெறக்கூடியவாறும், அதிக மேற்கோள்களின் ஊடாக (Citations) உயர்வைப் பெறுவதை நோக்காகக் கொண்டுமே குறித்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது செயலமர்வு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவிலில் வளாகத்திலும் மற்றயது சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் முறையே தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.எம். தாரீக், பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னூடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்