Back to homepage

Tag "உள்ளுராட்சித் தேர்தல்"

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம் 0

🕔6.Dec 2017

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுச் சபை கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல் 0

🕔3.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள கலப்பு முறையிலான உள்ளுராட்சித் தேர்தல் இதுவாகும். இருந்தபோதும், 2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான செலவாக, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 550 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேற்படி

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔30.Nov 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது. கடந்த 22ஆம் திகதி

மேலும்...
மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது 0

🕔28.Nov 2017

மஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தினை செலுத்த முடியும் என,

மேலும்...
திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு 0

🕔27.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. “அந்த உள்ளூராட்சி மன்றங்களின்

மேலும்...
பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு 0

🕔25.Nov 2017

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது. உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இரண்டு முறைகளில் தேர்தலை நடத்த முடியும் என்று, இதன்போது சட்ட மா அதிபர் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள்

மேலும்...
அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல் 0

🕔22.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அச்சுறுத்தல் விடுத்தார். மேலும், தேர்தலைத் துரிதப்படுத்துவதற்காக அனைத்துவித சட்ட நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார். சில

மேலும்...
உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு 0

🕔22.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. கடந்த இரண்டரை வருடங்களாக தேர்தல்களைப் பிற்போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,

மேலும்...
ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

🕔21.Nov 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட மேலும் சில கட்சித் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன்போது – எதிர்கொள்ளவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

மேலும்...
தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔17.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து இரண்டு கிழமையின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார். வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக மூன்றரை வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களின்

மேலும்...
தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு 0

🕔15.Nov 2017

உள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் மோசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மூலம், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத்  தொடுத்துள்ளதாகவும்  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே,

மேலும்...
கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம்

கல்முனை மாநகரசபைத் தேர்தல்: தனித்து முஸ்லிம் கட்சியொன்று ஆட்சியமைக்க முடியாத அவலநிலை உருவாகலாம் 0

🕔2.Nov 2017

– அஹமட் – புதிய தேர்தல் முறைமையின் கீழ் கல்முனை மாநகர சபை மொத்தமாக 24 உள்ளுராட்சி வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, கல்முனை முஸ்லிம் பகுதி 06 வட்டாரங்களாகவும், கல்முனை தமிழர்கள் பகுதி 07 வட்டாரங்களாகவும், மருதமுனை 03, நற்பிட்டிமுனை 02 மற்றும் சாய்ந்தமருது 06 வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்றைய சாய்ந்தமருது பிரகடனத்துக்கு அமைவாக

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர

உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த அணியை இணைத்துக் கொண்டு போட்டியிடவுள்ளோம்: அமைச்சர் அமரவீர 0

🕔28.Oct 2017

– க. கிஷாந்தன் – உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பாரியளவிலான வெற்றியை பெற்றுக்கொள்வதற்கு, ஒன்றிணைந்த எதிரணியையும் (மஹிந்த அணி) இணைத்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வட்டகொடை மடக்கும்புர பிரதேசத்தில் வெலிகல வாவி புனரமைக்கப்பட்டு இன்று சனிக்கிழமை மீன் குஞ்சுகள்

மேலும்...
தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்

தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம் 0

🕔27.Oct 2017

ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது அதிருப்தியையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ளார். தேர்தலுக்கான திகதியினை தனது அலுவலகமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்