அரசாங்கம் சதி செய்தால், எந்தவொரு சக்தியுடனும் கை கோர்ப்போம்: ஜே.வி.பி. தலைவர் அச்சுறுத்தல்

🕔 November 22, 2017

ள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி வேலைகளில் அரசாங்கம் ஈடுபடுமாக இருந்தால், எந்தவொரு அரசியல் சக்தியுடனும் இணைந்து தேர்தலை வெற்றி கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அச்சுறுத்தல் விடுத்தார்.

மேலும், தேர்தலைத் துரிதப்படுத்துவதற்காக அனைத்துவித சட்ட நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. மேற்கொள்ளும் எனவும் அவர் கூறினார்.

சில விடயங்களை நீதித்துறையினால் சாதித்துக் கொள்ள முடியாது என்று இதன்போது தெரிவித்த ஜே.வி.பி தலைவர்; தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுப்பதற்காக, வீதிகளில் இறங்கப் போவதாகவும் தெரிவித்தார்.

தொடர்பான செய்திக்கு: உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்