வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை ரத்து; மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

🕔 November 30, 2017

ள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிக்கைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை, அந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த அறிக்கைக்கு எதிராக வழக்குத் தொடுத்தவர்கள், தமது வழக்குகளை இன்று வாபஸ் பெற்றமையினை அடுத்து, நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்காலத் தடையினை இல்லாமல் செய்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி மேற்படி வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை காரணமாக, உள்ளுராட்சி மன்றங்கள் பலவற்றுக்கு தேர்தலை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரே, தமது ஆதரவாளர்கள் மூலமாக, மேற்படி வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்ததாக, அரசியல் அரங்கில் குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட வழக்குத் தொடுநர்களுடன் – தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனையடுத்து அவர்கள் தமது வழக்குகளை வாபஸ் பெற சம்மதித்ததாகவும் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலைவரம் காரணமாக, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்