ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்கள் சிலருக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு; மஹிந்தவுடன் இணையுமாறும் கோரிக்கை

🕔 November 21, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சில கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட மேலும் சில கட்சித் தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது – எதிர்கொள்ளவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, நள்ளிரவைத் தாண்டியும் நீண்டது.

இதன்போது, மஹிந்த அணியினையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி களமிறங்க வேண்டுமென்றும் இல்லா விட்டால் வெற்றிக்காக போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், சில கட்சித் தலைவர்கள் – சு.கட்சியின் தலைவர் எனும் வகையில் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

ஆனால், அது குறித்து உடனடி தீர்மானத்துக்கு வர முடியாது என்றும், தேர்தல் தொடர்பாக சு.கட்சிக்குள் அமைக்கப்பட்டுள்ள குழுவே, இது குறித்து தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் எனவும், அங்கு சமூகமளித்திருந்த சு.கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

புதிது பேஸ்புக் பக்கம்