தேர்தல் தினத்தை நாம்தான் தீர்மானிப்போம்; ஜனவரி 27இல் தேர்தல் எனக் கூறியோர் தொடர்பில், மஹிந்த தேசப்பிரிய விசனம்
ஜனவரி மாதம் 27ஆம் திகதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறும் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் தெரிவித்திருந்தமை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது அதிருப்தியையும், விசனத்தினையும் வெளியிட்டுள்ளார்.
தேர்தலுக்கான திகதியினை தனது அலுவலகமே தீர்மானிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று வியாழக்கிழமை மஹிந்த தேசப்பிரியவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போதே, அவர் அதிருப்தியினை வெளியிட்டதோடு, தனது கருத்தினையும் கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஆளுந்தரப்பிலுள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்டோர், எதிர்வரும் 27ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்றைய கூட்டத்தில் பேசும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தனது அதிருப்தியையும், விசனத்தையும் வெளிப்படுத்தினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்; ஜனவரி 27ஆம் திகதி அல்லாத வேறொரு நாளில் தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தைரியமில்லையா எனவும் கேள்வியெழுப்பினார்.