உள்ளுராட்சி தேர்தலைப் பிற்போடுவதற்கு திரை மறைவில் சதி; தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு

🕔 November 22, 2017

ள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாக, தேர்தல் கண்காணிப்புக்களில் ஈடுபடும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கடந்த இரண்டரை வருடங்களாக தேர்தல்களைப் பிற்போடும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் நாட்டிலுள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

பொதுமக்களின் நலனை விடவும், அரசியல்வாதிகள் தமது நலமை முன்னிறுத்தி செயற்படுகின்றமையினாலேயே, இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்