தேர்தல் அறிவிப்பு 27ஆம் திகதி விடுக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

🕔 November 17, 2017

ள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவித்தல் இம்மாதம் 27ஆம் திகதி விடுக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தேர்தல் தினம் அறிவிக்கப்படும் நாளிலிருந்து இரண்டு கிழமையின் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக மூன்றரை வேலை நாட்கள் வழங்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு 06 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால், உள்ளுராட்சித் தேர்தல் பிற்போடப்படலாம் எனும் சந்தேகமும் நிலவுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்