பிரதமர் – சட்ட மா அதிபர் சந்திப்பு: தேர்தலை நடத்துவற்கான சாத்தியங்கள் தொடர்பில் பேச்சு

🕔 November 25, 2017

பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் சட்ட மா அதிபருக்கும் இடையிலான திடீர் சந்திப்பொன்று, இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றில் இடம்பெற்றது.

உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் கண்டறியும் பொருட்டு, இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இரண்டு முறைகளில் தேர்தலை நடத்த முடியும் என்று, இதன்போது சட்ட மா அதிபர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டதாகவும் அறிய முடிகிறது.

பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கான அதிக பட்ச சாத்தியங்கள் இருப்பதாக முக்கிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.-

Comments

புதிது பேஸ்புக் பக்கம்