மஹிந்தவின் பொதுஜன பெரமுன; 16 இடங்களில் கட்டுப் பணம், நேற்று மட்டும் செலுத்தியது

🕔 November 28, 2017

ஹிந்த ராஜபக்ஷவின் சார்புக் கட்சியான பொதுஜன பெரமுன, 16 உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை கட்டுப் பணம் செலுத்தியுள்ளது.

களுத்துறை, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் பொருட்டு இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தினை செலுத்த முடியும் என, நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாகவே இவ்வாறு அந்தக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

நேற்றை தினம் முதல் 13ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில், சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்த எதிரணியும் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான இணக்கத்தைக் காணும் பொருட்டு, இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்