திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகிறது; 133 சபைகளுக்கு தேர்தல் நடத்த முடியும் எனவும் தெரிவிப்பு

🕔 November 27, 2017

ள்ளூராட்சி மன்றங்களின் எல்லை மற்றும் உறுப்பினர் தொகை பற்றிய திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று திங்கட்கிழமை வெளியிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது, 40 சபைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுப்பிழையைச் சரிசெய்து, இந்தத் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

“அந்த உள்ளூராட்சி மன்றங்களின் பெயரை குறிப்பிடும் போது அல்லது அதற்குரிய கிராம சேவகர் பிரிவை குறிப்பிடும் போது, சிறிய அச்சுப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. ஆகையால்தான், அந்த 40 சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு, இடையூறு ஏற்பட்டுள்ளது” என்று அவ்வமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியானதன் பின்னர், அந்த 40 சபைகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தமுடியுமென அவர் தெரிவித்தார். தற்போது 93 சபைகளுக்கான தேர்தலையே நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதில், அச்சுப்பிழை ஏற்பட்டுள்ள 40 சபைகள் உள்ளடங்கவில்லை. இந்நிலையில், திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதும், 40 சபைகளையும் சேர்த்து, 133 சபைகளுக்கும் தேர்தலை நடத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்