Back to homepage

கட்டுரை

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை விவகாரம்; போக்கிரித் தந்தையும், பக்கத்து வீட்டுக்காரரும்; இரண்டும் ஒன்றல்ல

– தராசு முள்ளர் – சாய்ந்தமருக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கைப் போராட்டத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உருவ பொம்மையுடன் இணைத்து, அமைச்சர் றிசாட் பதியுதீனின் உருவ பொம்மையினை எரித்தமையில் எவ்வித நியாய தர்மங்களும் இல்லை. சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆணையினை பெற்றுக்கொண்ட கட்சி எனும் வகையில், அந்த ஊருக்கான உள்ளுராட்சி சபையினைப் பெற்றுத் தருவது,

மேலும்...
ஆப்பின் கூரிய முனை

ஆப்பின் கூரிய முனை

– முகம்மது தம்பி மரைக்கார் – துருக்கித் தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை..நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள்

மேலும்...
நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும்

– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு

மேலும்...
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயமும், முஸ்லிம் அடையாள அரசியலுக்கான சாவு மணியும்: விளக்குகிறார் பசீர் சேகுதாவூத்

– பசீர் சேகுதாவூத் – மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான குழுவுக்கு தமது சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்காக முஸ்லிம் சிவில் சமூகம் புத்தி ஜீவிகளையும், துறை சார்ந்தோரையும் இணைத்துக்கொண்டு தீவிரமான கலந்துரையாடல்களை நிழ்த்துவதைக் காணமுடிகிறது. மஹிந்த காலத்து நன்மை கடந்த ஆட்சிக் காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான வட்டாரங்களின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதில் 1000 வட்டாரங்கள் இரட்டை

மேலும்...
நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

நேற்று இனவாதிகள் சொன்னதை, இன்று ஜனாதிபதி செய்கிறார்: மாடறுப்புத் தடைக்கான முன்னேற்பாடு

– மொஹமட் அம்மார் – மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை, சில பௌத்த அமைப்புக்கள் நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டின்போது முன்வைத்திருந்தன.இன்று ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, மாடுகளை ஏற்றிச் செல்வதை தடை செய்துள்ளார். இவற்றை தொடர்புபடுத்தி பார்க்கின்றபோது, இனவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இவ்விடயம் நடந்தேறியுள்ளமை தெளிவாகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனவாத சிந்தனை

மேலும்...
வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கும், வீரகேசரியை புறக்கணிக்க வேண்டியதன் நியாயங்களும்; பாகம் – 01

– சோனகன் – வீரகேசரி நாளிதழில் முஸ்லிம் மக்கள் சார்பான முக்கியத்துவம் மிகுந்த செய்திகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மட்டுமன்றி, இந்தப் பத்திரிகையில் எழுதி வந்த குறிப்பிடத்தக்க முஸ்லிம் ஊடவியலாளர்கள் சிலரின் எழுத்துக்களுக்கும், அந்தப் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து வருவதாகவும் தெரியவருகிறது. வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜனின் முஸ்லிம் விரோதப் போக்கே

மேலும்...
உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

  – ஏ.எல். நிப்றாஸ் – சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக

மேலும்...
ஞானசாரவுடன் முஸ்லிம்  தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

ஞானசாரவுடன் முஸ்லிம் தரப்பின் தொடர் உரையாடல்; பின்னணி என்ன: வெளிச்சப்படுத்துகிறார் பசீர் சேகுதாவூத்

– பசீர் சேகுதாவூத் – பொது பலசேன அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருடன் முஸ்லிம் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் நிகழ்த்திவரும் தொடர் உரையாடல் தொடர்பாக சாதகமாகவும், பாதகமாகவும், சமநிலையாகவும் இணையங்கள் மற்றும் ஓரிரு அச்சு ஊடகங்களில் பேசப்படுகிறது. தனிப்பட்டவர்களினால் முகநூலில் தீவிரமாக விமர்சிக்கப்படுவதையும் காணக் கிடைக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலவேர் எங்கிருந்து படர்ந்து வருகிறது என்பதை அறிவதும், அறிந்துகொண்ட

மேலும்...
முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

முஸ்லிம் அரசியல்: சண்டையில் கிழியாத சட்டை

– முகம்மது தம்பி மரைக்கார் – யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்பதற்காகத் தமது கருத்துகளை, ஒளித்து வைத்திருப்பது, புத்திசாதுரியமான செயற்பாடு அல்ல; அப்படிச் செய்வது சந்தர்ப்பவாதத்தின் உச்சமமாகும். ஒரே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள், நம்மை நயவஞ்சகர்களாக மாற்றி விடக்கூடும். சொல்ல வேண்டிய விடயத்தைச் சொல்ல வேண்டிய தருணத்தில், சொல்லாமல் விடுவதென்பது, நமக்கு நஷ்டத்தையே

மேலும்...
முஸ்லிம் தனிஅலகின்  ஆழ அகலங்கள்

முஸ்லிம் தனிஅலகின் ஆழ அகலங்கள்

  – ஏ.எல். நிப்றாஸ் – தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் கொமடிகளில் ‘வாழைப்பழக் கதை‘ மிகவும் பிரபலமானது. கொடுக்கப்படுகின்ற பணத்திற்கு தரப்பட வேண்டிய இரு வாழைப்பழங்களுக்கு பதிலாக ஒரு பழத்தை மட்டும் காண்பித்துவிட்டு, ‘இதுதான் மற்றைய பழம்‘ என்று வாதிடுகின்ற இந்த கொமடிக் காட்சி போலவே, நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தோரணையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்