Back to homepage

Tag "கல்வியமைச்சு"

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம்: கல்வியமைச்சின் செயலாளர் 0

🕔17.Sep 2021

பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக உலகளாவிய ரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி – ஜனாதிபதி தலைமையிலான கொவிட்

மேலும்...
உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு

உயர் தரம் மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைகள் தினம் அறிவிப்பு 0

🕔9.Jul 2021

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சகைள் நடைபெறும் திகதிகளை கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும். இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை

மேலும்...
மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம்

மாணவிகளுக்கு மாதவிடாய் கால நப்கீன்களை இலவசமாக வழங்க கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔3.Jan 2021

நாட்டிலுள்ள பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நப்கீனை இலவசமாக வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 06ஆம் வகுப்பு முதல் உயர்தரம் வரை கற்கும் 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவிகள், மாதாந்தம் மாதவிடாயின் போது இரண்டு நாட்கள் பாடசாலைக்கு வருவதனை தவிர்ப்பதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குறித்த மாணவிகளின் கல்வி நடவடிக்கைக்கு

மேலும்...
பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்து, கல்வியமைச்சர் அறிவிப்பு 0

🕔21.Dec 2020

நாட்டிலுள்ள பாடசாலைகளில் தரம் 01 தொடக்கம் 05 வரையிலான வகுப்புகளையும், முன்பள்ளி பாடசாலைகளையும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். இருந்தபோதும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்பட மாட்டாது

மேலும்...
பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

பாடசாலைகள் நாளை ஆரம்பம்: பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔22.Nov 2020

பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது. இருப்பினும் நாளை பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருப்பதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது. அத்துடன் ஆறாம் வகுப்பு

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம்

ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை; இம்முறை எழுதும் மாணவர்களுக்கு அடித்தது அதிஷ்டம் 0

🕔29.Jul 2020

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை இம்முறை எழுதும் மாணவர்களுக்கு முதலாவது வினாத்தாளுக்கான கால எல்லையை 15 நிமிடங்களினால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இதுவரையில் 45 நிமிடமாக இருந்த கால எல்லை ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த

மேலும்...
திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு

திங்கள் தொடக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பம்: 3.30 வரை நடத்திச் செல்லவும் அறிவிப்பு 0

🕔23.Jul 2020

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கற்றல் ஆரம்பிக்கும் வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த விதிகளுக்கான புதிய சுற்றறிக்கையை இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள்

மேலும்...
க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔20.Jul 2020

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரையில் நடைபெறும். 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம்

மேலும்...
தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு

தரம் 01, 02 மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும் தினம் குறித்து அறிவிப்பு 0

🕔1.Jul 2020

கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் தரம் 01 மற்றும் தரம் 02 வகுப்புகள் அனைத்தும் ஒக்டோபர் 03ஆம் திகதி மீளவும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு நேற்று முன்தினம் 29ஆம் திகதி, அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளித்திருந்தனர். கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜூலை 06ஆம் திகதி

மேலும்...
க.பொ.த. உயர்தரப் பரீட்சை தினம்: பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தினம்: பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் 0

🕔17.Jun 2020

க.பொ.த. உயர்தரப்பரீட்சை நடத்தப்படும் தினம் தொடர்பான தீர்மானம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல்வார இறுதியில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் 06 ஆம் திகதி பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமானதன் பின்னர், உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளை ஆராய்ந்து

மேலும்...
பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம்

பாடசாலைகளை 04 கட்டங்களாகத் திறக்க, கல்வியமைச்சு தீர்மானம் 0

🕔9.Jun 2020

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளள. அதற்கிணங்க முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக  ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின்

மேலும்...
மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம்

மொழிக் கொள்கையை மீறும் கல்வியமைச்சு: கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் 0

🕔15.Aug 2019

– அஸ்லம் எஸ்.மௌலானா – இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தரத்துக்கு பதவியுயர்வு வழங்குவதற்காக கல்வி அமைச்சினால் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் விவரம் கோரும் படிவம் என்பன தனிச்சிங்களத்தில் அமைந்திருப்பதாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இம்மொழிப்புறக்கணிப்பானது அரசாங்கத்தின் தேசிய

மேலும்...
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத் தலைவர் மீது தாக்குதல்; வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Jul 2018

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் தம்மிக அலகபெரும தாக்குதலுக்குள்ளான நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வியமைச்சுக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டபோது காயமடைந்த நிலையில், இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கல்வியமைச்சுக்குக் காரியாலயத்துக்கு முன்னால் நேற்று பல ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த நிலையில், இரண்டு ஆசிரியர்

மேலும்...
முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் 0

🕔9.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – நோன்பு கால விடுமுறைக்காக முஸ்லிம் பாடசாலைகள் மூடப்படும் திகதியில் மாற்றம் செய்துள்ளதாக கல்வியமைச்சு சுற்று நிரூபமொன்றின் மூலம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இம் மாதம் 12ம் திகதி நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் நோன்புகால விடுமுறைக்காக மூடப்படும் எனவும் 11ம் திகதி பாடசாலை இறுதி தினம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த

மேலும்...
கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம்

கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை; திகன சம்பவத்தினையடுத்து அமைச்சு தீர்மானம் 0

🕔5.Mar 2018

கண்டி நிருவாக மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், நாளை செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கண்டி மாவடத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. திகன பிரதேசத்தில் சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக, அங்கு பொலிஸ் ஊரடங்குச சட்டம் நாளை காலை 6.00 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகன பிரதேசத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்